தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் கூறினார் .
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத் தில் உள்ள மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் , திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து , தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று பல்வேறு இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று பொது மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . 

அப்போது அவர் பேசியதாவது :

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது . கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது . கடந்த கால அதிமுக ஆட்சியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது . ஆனால் , தற்போது திமுக ஆட்சியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது . 

ஒரு லட்சம் படுக்கை , 1,000 டன் ஆக்சிசன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது . இதனால் , 3 வது அலை வந்தாலும் அதை கட்டுப்படுத்த அரசு தயாராக உள்ளது . பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் மற்றும் புதிய பஸ்களும் விரைவில் இயக்கப்படும் . அரக்கோணம் ஒன்றியத்தில் பல்வேறு அடிப்படை சதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு அவர் பேசினார் .