மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்ட செய்தி குறிப்பு: 
ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் செப்டம்பர் 6 ம் தேதி பகல் 12 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் https://tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் தங்கள் பெயர், வார்டு, ஓட்டுச் சாவடி குறித்த விவரங்களை இந்த இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது .