வாலாஜா தண்டுமாரியம்மன் கோயில் தெருவில் பாத்திரக்கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்தபிறகு கடையை அதன் உரிமையாளர் அண்ணாமலை பூட்டி விட்டு சென்றார். 

இதையடுத்து நள்ளிரவு கடையில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள், அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கடையை திறந்தபோது அங்குள்ள சில பொருட்கள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. 

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து வாலாஜா போலீசார் விசாரித்து வருகின்றனர்.