கடந்த 24 ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் 110 விதியின்கீழ் சோளிங்கர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 
புதிதாக உதயமாகும் நகராட்சி எல்லைக்குள் சோளிங்கரில் ஏற்கனவே உள்ள 18 வார்டுகள் மற்றும் பாண்டியநல்லூர் மற்றும் சோமசமுத் திரம் ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் , நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான கருத்து கேட்பு கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்ப ராஜ் அறிவுறுத்தலின்படி, நாளை காலை 10 மணிக்கு சோளிங்கர் தக்கான்குளம் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 

இதில், அனைத்து கட்சிபிரமுகர்கள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கவேண்டும் என செயல்அலுவலர் ரேவதி தெரிவித்துள்ளார்.