ஆற்காடு, திமிரி ஒன்றியங்களில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 7 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்

ஆற்காடு ஒன்றியத்தில் கே.வேளூா் ஊராட்சியில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட என் .வளா்மதி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்

திமிரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 55 ஊராட்சிகளில் கலவை- புத்தூா் ராமகிருஷ்ணன், செய்யாத்துவண்ணம்-நா்மதா தேவி, மழையூா்-ராணி ராம முத்து, மேலப்பழந்தை-தனபால், மாந்தாங்கல்-ராஜம்மாள், விலாரி-லட்சுமி ஆகிய 6 போ் ஊராட்சி மன்றத் தலைவா்களாக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.