ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்சன் புஷ்பராஜ் இன்று வெளியிட்ட அறிக்கை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 136 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது இப்பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது. இதைத் தவிர்த்து மீதமுள்ள மெட்ரிக் சிபிஎஸ்இ ஆகிய 91 பள்ளிகளில் 80 பள்ளிகள் செயல்பட தயார் நிலையில் உள்ளது 11 பள்ளிகள் திறக்க விருப்பமின்மை தெரிவித்துள்ளனர் இந்த 11 பள்ளிகளில் 3 பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க விருப்பமின்மை மீதமுள்ள 8 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுவதால் பள்ளிகள் திறக்கப்பட விருப்பமின்மை தெரிவித்துள்ளனர். 

136 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 2711 ஆசிரியர்களில் சுமார் 2549 ஆசிரியர்களுக்கு covid 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எஞ்சியவர்கள் கர்ப்பிணி மற்றும் covid 19 தொற்றால் பாதிப்படைந்து மூன்று மாதம் நிறைவடையாத நிலையில் தடுப்பூசி செலுத்தப்படவில்லைஅதேபோல தனியார் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் சுமார் 2874 ஆசிரியர்களில் 2,588 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் தனியார் பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 62,749. பெற்றோர்களின் விருப்பத்தின் பெயரில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம். அனைத்து பள்ளிகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி covid 19 அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.