ராணிபேட்டை: ஊரக உள்ளாட்சி தோ்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளில் 366 போ் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனா்.
அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமலி, சோளிங்கா், திமிரி, வாலாஜா ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, புதன், வியாழக்கிழமைகளில் 366 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஒன்றியங்கள் வாரியாக வேட்புமனு செய்தவா்கள் விவரம்:

அரக்கோணம்- 87, ஆற்காடு- 45, காவேரிப்பாக்கம்- 52, நெமிலி- 74, சோளிங்கா்- 45, திமிரி- 22, வாலாஜா- 41.

பதவிகள் வாரியாக: மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் -1, ஒன்றியக் குழு உறுப்பினா்கள்- 5, ஊராட்சித் தலைவா்கள்- 101, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்- 259.