மத்திய அரசு இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில்களில் வைபை சேவை அளிப்பதாகவும், இதற்காகச் சோதனை திட்டம் நடத்த உள்ளதாகவும் 2019ல் முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
மேலும் இத்திட்டம் அடுத்த 4.5 வருடத்தில் இந்தியாவின் அனைத்து ரயில்களிலும் அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கப்படும் எனவும் பியூஷ் கோயல் தெரிவித்தார், ஆனால் தற்போது மத்திய அரசு இதைச் செய்ய முடியாது எனக் கைதூக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டு உள்ள எழுத்துப்பூர்வமான விளக்கத்தில் இந்திய ரயில்வே துறை ரயிலில் அதிவேக வைபை சேவை அளிக்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளது. மக்களுக்கும், அரசுக்கும் இது செலவுக்கு ஏற்ற திட்டமாக இது இல்லை என்பதால் கைவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இத்திட்டத்தின் சோதனை திட்டம் ஹவ்ரா ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வைபை சேவை செயற்கைக்கோள் வாயிலாக அளிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்புக்கு அதிக செலவாகும் என்பதை உணர்ந்து கைவிட முடிவு செய்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் செயல்படுத்த அலைக்கற்றை வாங்குவதற்கும், கட்டமைப்பை அனைத்து ரயில்களில் உருவாக்குவதற்கும் அதிகம் முதலீடு செய்ய வேண்டி நிலை உருவாகியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்திற்கு அளிக்கப்படும் பேண்ட்வித் பயணிகளுக்குப் போதுமானதாகவும் இல்லை என்பதால் இப்போதைக்கு ரயிலில் வைபை தேவை அளிக்கும் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அஸ்வினி வைஷ்ணவ்.