சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி (நாளை) சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடி வைக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானக் கடைகள் மற்றும் அதையொட்டி உள்ள பார்களையும் மூடி வைக்க வேண்டும்.

நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்களிலும் மதுக்கூடங்களையும் மூடி வைக்க வேண்டும். உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தள்ளார்.

வேலூர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.