ஆற்காடு: கலவை அருகே, 3,500 லிட்டர் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை போலீசார் இன்று நல்லுாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கினர். ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் உள்ளிட்ட இரண்டு பேர் தப்பியோடினர். ஆட்டோவில் 3, 500 லிட்டர் எரி சாராயம் இருந்தது.

விசாரணையில், கள்ள சாராயம் தயாரிப்பவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ஆந்திரா மாநிலம், சித்துாரில் இருந்து திருவண்ணமலைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
போலீசார் ஆட்டோவுடன் சேர்ந்து எரி சாராயத்தை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.