இந்தியாவில் கடந்த 21 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் நாடுமுழுவதும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் அதனால் ஏற்படும் பொருட்களின் விலை உயர்வுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 வாரமாகப் பெட்ரோல், டீசல் விலை உயராமல் ஓரே விலையில் விற்பனை செய்யப்படுவது மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. விலை உயராவிட்டாலும் அரசுக்குத் தான் அதிக லாபம் கிடைத்துள்ளது, வழக்கம் போல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


பெட்ரோல் டீசல் விலை

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

கொரோனா தொற்று

அந்த வகையில் உலகம் முழுவதும் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் பல நாடுகளில் பரவி வரும் டெல்டா வகை வைரஸ் ஆகியவற்றின் காரணமாக உலக நாடுகளில் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தேவை சரிந்து ஒரு பேரலுக்கு 5 டாலர் வரையில் விலை குறைந்துள்ளது.
21 நாள் ஓரே விலை

ஆனால் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்து போது விற்பனை செய்யப்பட்ட அதேவிலையில் பெட்ரோல், டீசல் தொடர்ந்து 21 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் குறைக்கப்பட்ட பேரல் விலையின் வருவாய் அரசுக்கு போய் சேர்கிறது. அரசுக்கு அதிகளவிலான வருமானம் கிடைத்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

WTI கச்சா எண்ணெய் விலை ஜூலை 13ஆம் தேதி 75.25 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது ஆனால் இன்று 68.28 டாலருக்கு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் 76.49 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது 70.70 டாலருக்கு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் இந்தியா அதிகம் வாங்கும் OPEC பேஸ்கட் ஆயில் விலை இதே காலகட்டத்தில் 75.29 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுத் தற்போது 71.20 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்தியன் பேஸ்கட் ஆயில் விலையும் ஜூலை மாதத்தில் 75.97 டாலரில் இருந்து தற்போது 71.54 டாலருக்கு குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல்

இப்படிக் கடந்த 21 நாட்களில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து சந்தைகளிலும் இதன் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் அதே பழைய உச்ச விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அடுத்த நாளே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விலை குறையும் போது ஏன் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்பது தான் தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மும்பை

பெட்ரோல் - 107.83 ரூபாய்

டீசல் - 97.45 ரூபாய்

டெல்லி

பெட்ரோல் - 101.84 ரூபாய்

டீசல் - 89.87 ரூபாய்

சென்னை

பெட்ரோல் - 102.49 ரூபாய்

டீசல் - 94.39 ரூபாய்

கொல்கத்தா

பெட்ரோல் - 102.08 ரூபாய்

டீசல் - 93.02 ரூபாய்

போப்பால்

பெட்ரோல் - 110.20 ரூபாய்

டீசல் - 98.67 ரூபாய்

ஹைதராபாத்

பெட்ரோல் - 105. 83 ரூபாய்

டீசல் - 97.96 ரூபாய்

பெங்களூர்

பெட்ரோல் - 105.25 ரூபாய்

டீசல் - 95.26 ரூபாய்

கவுகாத்தி

பெட்ரோல் - 97.64 ரூபாய்

டீசல் - 89.22 ரூபாய்

லக்னோ

பெட்ரோல் - 98.92 ரூபாய்

டீசல் - 90.26 ரூபாய்

காந்திநகர்

பெட்ரோல் - 98.79 ரூபாய்

டீசல் - 96.95 ரூபாய்

திருவனந்தபுரம்

பெட்ரோல் - 103.82 ரூபாய்

டீசல் - 96.47 ரூபாய்