ராணிப்பேட்டை மாவட்டம் 
ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் பெல் மண்ணும் மரமும் குழு சார்பாக இன்று 5000 பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது

தமிழகத்தின் பாரம்பரிய மரபான பனைமரம் நாளுக்கு நாள் அழிந்து வரும் நிலையில் பனைமரத்தை பாதுகாத்தால் பூமி வெப்பம் அடைவது குறையும் நீர்வளம் பெருகும் என கூறப்படுகிறது எனவே பனைமரத்தை பாதுகாக்கும் வகையில் பெல் பகுதியில் செயல்பட்டு வரும் பெல் மண்ணும் மரமும் குழு சார்பாக ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி கடந்த வாரம் துவங்கப்பட்டது 
இதில் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை படுத்த நரசிங்கபுரம் பகுதியில் இன்று ஐந்தாயிரம் பனை விதைகள் நடும் பணி இன்று நடைபெற்று வருகிறது இதில் மண்ணும் வளமும் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் k. ராஜு பெல். கி. சேகர், வாலாஜா வட்டார வட்டாட்சியர் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்