அரக்கோணத்தில், பெண்களால் மட்டும் நிர்வகிக்கப்படும் அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது. 
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அசோக் நகரில் பெண்களால் மட்டும் நிர்வகிக்கப்படும் துணை அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது. அரக்கோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கரன் இதை தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது: 

நாடு முழுவதும் 1.50 லட்சம் அஞ்சலக அலுவலகங்கள் உள்ளன. தினமும் 2 லட்சம் தபால்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் 2 தலைமை அஞ்சலகம், 44 துணை அஞ்சலகம் உள்ளது. அரக்கோணம் அசோக்நகரில், முழுக்க பெண்களே நிர்வகிக்கக் கூடிய 45வது துணை அஞ்சலகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு துணை அஞ்சல் அலுவலர், மூன்று ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.