இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ் வெண்பாக்கம் புதிய காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு கூலித்தொழிலாளி இவரது மனைவி அனிதா(32) இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டருகே உள்ள தோட்டத்திற்கு பாத்ரூமுக்கு இயற்கை உபாதைக்காக சென்றார்

அப்போது எதிர்பாராதவிதமாக விஷத்தன்மை கொண்ட பூச்சி ஒன்று அனிதாவை கடித்துள்ளது பிறகு அனிதா பூச்சி கடித்ததை கண்டுகொள்ளவில்லை

இந்நிலையில் இரவு அனிதா வீட்டிற்கு உள்ளே சென்ற போது திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார் உடனே அவரது சகோதரர் கமல் அனிதாவை சிகிச்சைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு தீவிர அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அனிதா பரிதாபமாக உயிரிழந்தார் 

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நெமிலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்