ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தெங்கடபந்தங்கள் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு மேலாண்மை இணைந்து மாவட்டத்தில் உள்ள நியாய விலை 614 கடைகளில் பணிபுரிந்து வரும் 367 நியாயவிலை விற்பனையாளர்களுக்கு ஒரு நாள் புத்துணர்வு பயிற்சி வகுப்பினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்

பிறகு மாவட்ட ஆட்சியர் பேசுகையில் அரசு துறையில் பணி பணிபுரியும் தமிழநாடு அரசு அலுவலர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம் அவர்கள் பணி சிறப்பாக செய்யும் பணிகளில் புதிய வழிமுறைகள் உத்திகள் செயல்படுத்துவதும் இந்த பயிற்சியை தொடர்ந்து வழங்கப்படுகிறது

அதனடிப்படையில் கூட்டுறவுத்துறை நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் அரசின் முக்கியமான பணியை மக்களுக்கு சென்று சேர்த்து வருகின்றனர் அரசு செயல்படுத்தும் இலவச உணவு பொருட்கள் மற்றும் குறைந்த விலையில் வழங்கும் உணவுப் பொருட்களை நியாய விலை கடைகள் மூலமாக அனைத்து பகுதிகளுக்கும் மக்களின் உணவுத் தேவையை சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள்

சமூகத்தில் கீழ்நிலையில் உள்ள மக்கள் தங்கள் அடுத்த நிலையை அடைய பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கியே செல்கின்றனர் இவர்களுக்கு வசதி குறைபாடு பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் கிடைக்க மன கஷ்டங்கள் மன அழுத்தம் என்பது அதிகமாக இவர்களுக்கு காணப்படுகின்றன

பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் நியாய விலை கடையில் அரசு வழங்கும் இலவச பொருட்களை எதிர்நோக்கியே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் 

நியாயவிலைக் கடைக்கு வரும் மக்கள் அனைவரும் விற்பனையாளர் கூறும் வரிசையில் நின்று அரசின் இலவச பொருட்களை பொறுமையாக வாங்கி செல்கின்றனர் 

அதே சமயத்தில் நியாயவிலை கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்கள் மனநிலை பிரச்சனை ஆகியவை கொண்டு வரும் மக்களை எப்படி கையாள்வது சிரமம் தாம் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோன்று ஏழை எளிய மக்களுக்கு நம் உணர்வுகளையும் கஷ்டங்களில் நாம் அறிந்து அவர்களுக்கான சேவை பணியை ஒரு இன்ப முகத்தோடு மக்களுக்கு செய்திட தர வேண்டும்

மேலும் விற்பனையாளர்கள் பொதுமக்களிடம் கனிவுடனும் அவர்களின் சூழலை உணர்ந்து கடைகளில் எவ்வித பிரச்சனைகளுக்கும் புகார்களுக்கும் மக்களுக்கு இடமளிக்காமல் பணியாளர்கள் புரிந்து அவர்களுக்கு சேவையை உறுதிப்படுத்திட வேண்டும் 

இயற்கை பேரிடர் பெருங்கற்காலம் என எக்காலத்திலும் முக்கிய அத்தியாவசிய பணி உணவு பொருள் விநியோகத்தில் தூண்களாக செயல்படுவது நியாய விலை கடையில் விற்பனையாளர்கள் ஆகும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற வரிகளுக்கு ஏற்ப உணவு பொருட்களை வழங்குபவர்கள் ஒரு உயிரை காக்க கூடிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் பணியினை உண்மையோடும் உணர்வோடும் பொதுமக்களுக்கு சேவை அளித்து வருகிறார்கள்

மேலும் நியாயவிலை கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று அனைத்து மக்களிடமும் விற்பனையாளர்கள் தகவலை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் 


மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி முகாமை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகிறார்கள் ஆகவே நியாயவிலை கடைக்கு வரும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களும் அவரது குடும்பத்தினரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் இந்த பயிற்சி முகாமில் கூறினார் 

இந்தப் பயிற்சி முகாமில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஜயப்பத்துரை பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் முரளிகண்ணன். மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை. வாலாஜா வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார். கூற்று சார்பதிவாளர் பிரபாகரன் ஆசைத்தம்பி. சமுத்திர விஜயன் 
மற்றும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.