ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு காவடி எடுத்து வரும் பக்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் கோயிலுக்குள்சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கோயில் நுழைவு வாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி கோட்டத் தலைவர் கோ.மகேஷ் கலந்துகொண்டு பேசினார். இதில் கோட்ட பொருளாளர் பாஸ்கர், கோட்ட செயலாளர் ரவி, மாவட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர்கள் ஜெகன், மணி, குமார், மோகன் மற்றும் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் காவடி எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பக்தர்கள் காவடி செலுத்த அனுமதி வழங்க கோரியும், கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க கோரியும் கோஷமிட்டனர். முன்னதாக 100க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் ரத்தினகிரி மேம்பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக வந்தனர். 

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏடிஎஸ்பி முத்துகருப்பன் தலைமையில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது.