INTERNETன் கொடூர முகம்!!|Dark web in tamil|explained|Mr fact man

டார்க் வெப் [Dark Web] என்றால் என்ன? டார்க் வெப்பில் என்னவெல்லாம் செய்வார்கள்?
சாதாரண பொதுமக்கள் பயன்படுத்துகிற இணையத்தின் மறுபக்கம் தான் டார்க் வெப். எவ்வளவு திறன் வாய்ந்த காவல்துறையாலும் கூட கண்டறியமுடியாத பல சட்டவிரோத செயல்கள் டார்க் வெப் வாயிலாகத்தான் நடைபெறுகின்றன.

பெரும்பான்மையான இணைய குற்றங்கள் அனைத்தும் நடைபெறுகின்ற இடமாக டார்க் வெப் [Dark Web] இருக்கிறது. திருடப்படும் கிரெடிட் கார்டுகளின் தகவல்கள், நெட்பிளிக்ஸ் கணக்குகளின் தகவல்கள், திருடப்படும் பாஸ்வேர்டுகள், சட்டவிரோத ஆயுதங்கள் போன்றவற்றை காவல்துறையின் கண்ணில் படாமல் விற்கவும் வாங்கவும் பயன்படுத்துகிற இடம் தான் டார்க் வெப்.


இவ்வளவு திருட்டுத்தனமான விசயங்கள் அனைத்தும் நடைபெற்றாலும் கூட காவல்துறையில் இவர்கள் சிக்குவதில்லை என்பதனால் டார்க் வெப் குறித்து தெரிந்துகொள்ள பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். இந்தக்கட்டுரையில் டார்க் வெப் குறித்த பல்வேறு தகவல்கள் இருக்கின்றன.