The Chennai police have arrested 2 conmen  who posed as actor Arya online to cheat a woman! The arrested suspects have been identified  as Muhammad Arman and his accomplice Hussaini!! Arya's reputation stands intact! 

5Vநடிகர்யா ஒரு வெளிநாட்டு பெண்ணிடம் பழகி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் இருந்து 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கடந்த சில மாதங்களாக பரபரப்பு செய்தி தீயாய் பற்றியிருந்தது. ஆனால் ஆர்யா பெயரில் இரண்டு நபர்கள் மோசடி நாடகம் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதில், ஆர்யா எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருப்பார். அவமானப்பட்டு இருப்பார் என்பதை உணர முடிகிறது . அதனால்தான் அவர் வெளிப்படுத்த முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
 
இலங்கையைச் சேர்ந்த பிட்ஜா என்கிற பெண் ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். அங்கு அவர் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக ஒரு புகாரினை அனுப்பியிருந்தார். அந்த புகாரில் தமிழ் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.

பிரபல நடிகர் ஆர்யா பற்றிய செய்தி என்பதால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் சரியாக இல்லாததால் பணக் கஷ்டத்தில் இருப்பதாக சொல்லி தன்னிடம் பணம் பறித்ததாக அந்தப்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்த்தபோது பொது மக்களுக்கும் ரசிகர்களுக்கும் இது உண்மைதான் என்று நம்பும்படியாக இருந்தது.

இந்த வழக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது ஆர்யாவுக்கு பணம் கொடுப்பதாக கூறப்பட்ட வங்கிக்கணக்கு, மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். கடந்த 10ஆம் தேதியன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்று தனது தரப்பு விளக்கத்தை சொன்னார் ஆர்யா. அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் கிரைம் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.

ஆய்வின்போது ஜெர்மனி பெண்ணுக்கு எந்தவிதமான மெசேஜ், செல்போன் அழைப்புகள் ஆர்யா செல்போனிலிருந்து செல்லவில்லை என்பதும், ஜெர்மனி பெண்ணின் செல்போனிலிருந்து ஆர்யாவுக்கு எந்த மெசேஜும் அழைப்பும் வரவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அப்படி என்றால் என்ன நடந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் அடுத்த கட்ட விசாரணையில் இறங்கிய போதுதான் நடிகர் ஆர்யாவை போலவே போலி வலைதளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பது தெரியவந்தது.
அந்த வலைதள ஐபி முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் தேடியதில் ராணிப்பேட்டை பெரும்புளிப்பாக்கத்தில் பதுங்கியிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சென்னை புளியந்தோப்பில் சேர்ந்த முகமது அர்மான் அவரது மைத்துனரும் முகமது ஹூசைனி பையாக் என்பது தெரியவந்தது.

உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடித்து விட்டதால் நடிகை ஆர்யட மீது ஏற்பட்டிருந்த களங்கம் நீக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், ’’உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்ததற்காக சென்னை காவல்துறை ஆணையருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நான் வெளிப்படுத்த முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன். என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்திருக்கிறார்.