சூட்டு கொப்புளங்களால் அவதியா? இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்!
பெரும்பாலும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் நேரத்தில் சூட்டு கொப்பளம் ஏற்படுகின்றது.
குறிப்பாக வெயில் காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூட்டுக் கொப்பளங்களால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு நாளைக்கு மூன்று முறை என்று ஒரு வாரத்திற்குச் செய்து வந்தால், இந்த சூட்டுக் கட்டிகள் கரைவதை நீங்கள் காணலாம். அப்படிச் செய்யும் போது கட்டிகள் கரையத் தொடங்கினால், அந்த இடத்தை நன்கு சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
சில துளி தேயிலை மர எண்ணெய்யைத் தேங்காய் எண்ணெய்யோடு சேர்த்து, பாதிக்கப் பட்ட இடங்களில் ஒரு பஞ்சால் நனைத்து வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு மூன்று முறையாவது செய்து வந்தால், விரைவில் குணமடைந்து விடும்.
மஞ்சளைச் சிறிது நீரில் குழைத்துப் பாதிக்கப் பட்டுள்ள இடத்தில் பூசவும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கட்டி உடைந்து குணமாகி விடும். இந்த மஞ்சள் தூளுடன், சிறிது இஞ்சியை அரைத்துச் சேர்த்துத் தடவினால் விரைவில் குணமாகி விடும்.