பள்ளி மாணவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது.

தக்கோலம் முதல் நிலைப் பேரூராட்சியில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் போட்டி தக்கோலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரைதல் போட்டியில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு
வரைந்தனர்.