அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில்...!!

அமைவிடம் :

⭐ இன்றும் அரியலூர் மாவட்டத்தில் ஒப்பில்லாத அம்மன் கோவில் ஆனது மிக பிரபலமாக உள்ளது. ஒப்பில்லாத அம்மன் ஏழு கன்னிமார்களின் அம்சம் ஆகும். ஏழு கன்னிமார்களின் ஒருவர்தான் இந்த ஒப்பில்லாத அம்மன்.

மாவட்டம் : 

⭐ அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

⭐ அரியலூர் மாவட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒப்பில்லாத அம்மன் கோயில் தெரு. நடந்தே சென்று விடலாம்.

கோயில் சிறப்பு :

⭐ கோபுரம் எதுவும் இல்லாமல் திறந்த வெளியில் அரசமர நிழலில் இருக்கும் கோயில். பெரிய பெரிய குதிரை சிலைகளுடன் பக்கத்தில் உள்ள காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.

⭐ கருவறையில் சப்த கன்னியர் இருக்கிறார்கள். அருகிலுள்ள சன்னதியில் பத்ரகாளியம்மன் சீற்றம் சிறிதும் இல்லாமல் சிரித்த முகத்தினினளாகக் காட்சியளிக்கிறாள். 

👉 பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது.

👉27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்குள் அடக்கப்படுகின்றது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது.

⭐ கணபதி, கந்தன் சன்னதியும் அமைந்துள்ளது. வெளியில் முனியப்பசாமி, அய்யனார், கருப்பனார் சன்னதிகள் உள்ளன.

⭐ ஒப்பில்லாத அம்மன் ஏழு கன்னியர்களின் அம்சம் என்பதால் ஓர் உருவே ஏழுருவானதாகச் சொல்கிறார்கள். 

⭐ மஞ்சள், குங்குமம், வளையல் சாற்றி அம்மனை வழிபடுவோர்க்கு வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடுவது நிச்சயம் என்று சொல்கிறார்கள்.

கோயில் திருவிழா : 

⭐ சித்திரை, ஆடி ஆகிய மாதங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

பிரார்த்தனை : 

⭐ வாழ்வில் எல்லா மங்களங்களும் கைகூடவும், சகல செல்வங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 

நேர்த்திக்கடன் : 

⭐ மஞ்சள், குங்குமம், வளையல் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். பொங்கலிட்டு வணங்கினால் சகல செல்வங்களும் பொங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கிருக்கும் காவல் தெய்வங்களின் சன்னதியில் தான் பலி நேர்த்திக்கடன் நடத்துகிறார்கள்.