பங்கு சந்தை என்றாலே அது ரொம்ப ரிஸ்கானது. சூதாட்டம். பணம் போட்டால் போய்விடும் என்ற கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால் மறுபுறம் லாபம் சம்பாதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

நீங்கள் பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள். எதில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள். உங்களின் இலக்கு என்ன? என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.

இது குறித்து பங்கு சந்தை நிபுணர்களிடம் பேசுகையில், நீங்கள் முதலீடு செய்வதற்கு முன், உங்கள் குறிக்கோளையும், எதிர்காலத்தில் உங்களது தேவையையும் பொறுத்து, நீங்கள் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும்.


யோசித்து முதலீடு செய்யுங்கள்

நல்ல வருமானத்தினை ஈட்டுவது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், நஷ்டம் என்பதையும் யோசிக்க வேண்டும். ஆக முதலீடு செய்யத் தொடங்கும் முன் யோசித்து முதலீடு செய்ய வேண்டும். ஒரு போதும் விரைவில் லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் முதலீடு செய்யாதீர்கள். பொறுமையாக இருந்து உங்கள் முதலீட்டினை தொடங்குவது நல்லது.


என்ன பங்கு அது?

இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கின் பெயர் பாலாஜி அமின்ஸ். இது கடந்த 12 மாதங்களில் அதன் பங்குதாரர்களுக்கு 542% லாபத்தினை அளித்துள்ளது. இந்த பங்கின் விலையானது கடந்த ஆகஸ்ட் 3, 2020 அன்றும் 618.95 ரூபாயாக இருந்துள்ளது. இன்று அதன் பங்கு விலை 3,977 ரூபாயாகும்.


பட்டையை கிளப்பிய லாபம்

ஆக ஒரு வருட காலக்கட்டத்தில் 542% லாபத்தினை கொடுத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் சென்செக்ஸ் 45% மட்டுமே அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமானால் இன்று அதன் மதிப்பு சுமார் 32 லட்சம் ரூபாய்க்கும் மேலாக அதிகரித்திருக்கும்.

தூள் கிளப்பிய பங்கு விலை

இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் இந்த பங்கின் விலையானது 271% அதிகரித்துள்ளது. ஜூன் 2021ல் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனம் வலுவான லாபத்தினை பதிவு செய்துள்ளது. இந்த காலாண்டு அறிக்கையானது வெளியான பிறகு இந்த பங்கின் விலையானது 20% அதிகரித்து, 3977 ரூபாய் என்ற உச்சத்தினையும் எட்டியது.

மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு மேல் வர்த்தகம்

11,000 கோடி ரூபாய்க்கும் மேலாக சந்தை மூலதனம் கொண்டுள்ள நிறுவனம் தான் பாலாஜி அமின்ஸ். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு மேலாக காணப்படுகின்றது.


டெக்னிக்கல் பேட்டர்ன்

வார மற்றும் மாத அளவில் ஓவர் பாட் லெவலில் உள்ளது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்ன் மீண்டும் பையிங் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் சந்தையானது குறுகிய காலத்திற்கு மீண்டும் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நீண்டகால நோக்கில் பார்க்கும்போது அதன் டார்கெட் லெவல் 4500 ரூபாய் வரையில் வாய்ப்புள்ளது. இதே சப்போர்ட் விலையானது 2600 ரூபாய் என்ற லெவலில் உள்ளது.


முக்கிய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

இந்த பங்கின் முக்கிய சப்போர்ட் லெவல் 2,828 ரூபாய் மற்றும் 2,600 ரூபாயாகும். இதே அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 4500 ரூபாய் மற்றும் 4,100 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.


கருத்து கணிப்பு

மார்கெட்ஸ் மோஜோவின் கருத்துக் கணிப்பு நிலவரப்படி, நிறுவனத்தின் கடன் விகிதம் குறைவாக உள்ளது, இன்னும் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் கடனுக்கு சேவை செய்யும் திறன் வலுவாக உள்ளது. தற்போதைக்கு இந்த நிறுவனத்தின் கடன் விகிதமானது எபிடாவில் 0.62 மடங்கு உள்ளது.

நிகர லாபம்

கடந்த 1 வருடத்தில் 542% லாபம் ஈட்டிய நிலையில், 3 வருடத்தில் பிஎஸ்இ 500ல் நல்ல ஏற்றம் கண்ட பங்குகளில் ஒன்றாகவும் உள்ளது.

இதற்கிடையில் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர லாபமானது 90.38 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் வெறும் 32.96 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.


இபிஎஸ் விகிதம்

இதே வருவாய் விகிதமானது 16% அதிகரித்து 450.68 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 222.91 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதே காலகட்டத்தில் இந்த பங்கின் இபிஎஸ் விகிதமானது 27.90 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் 2020ல் 10.17 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் என்ன செய்கின்றது?

இந்த நிறுவனம் இந்தியாவில் இராசயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்திற்கான தேவையானது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகின்றது.

இதற்கிடையில் இந்த நிறுவனம் 70 முதல் 80 கோடி ரூபாய் வரையில் Acetonitrile plant-னினை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆலையானது 2023ம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


எதிர்பார்ப்பு என்ன?

தற்போது இந்தியாவில் இதுபோன்ற இரசாயன நிறுவனங்களுக்கான தேவையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய இரசாயன வணிகத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனால் இந்த நிறுவனத்தின் லாபமானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் இதன் பங்கு விலையும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.