ராணிப்‌பேட்டை மாவட்டத்தில் முன்னாள்‌ ராணுவத்தினர்‌, தனியார்‌ பாதுகாப்பு நிறுவனங்‌கள்‌ மூலமாக வங்கி உள்‌ளிட்ட நிறுவனங்களில்‌. வேலை செய்யும்‌ செக்யூரிட்டிகள்‌ மற்றும்‌ தனிநபர்கள்‌ பாதுகாப்புக்கெனத் துப்பாக்கிகள் வைத்துக்‌ கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

"துப்பாக்கிகள்‌ வைத்‌துள்ள நபர்கள்‌ ஒவ்வொரு, ஆண்டும் கலெக்டர்‌ அலுவலகத்தில்‌ சமர்ப்பித்து உரிமத்தை புதுப்பிக்கும்‌ நடைமுறை செயல்படுத்‌தப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்‌பேட்டை மாவட்டத்தில்‌ பல்வேறு பாதுகாப்பு பணிகள்‌ மற்றும்‌ சொந்த தேவைக்காகத் துப்பாக்கிகள்‌ வைத்துள்ளோர்‌ நேற்று ராணிப்பேட்டை கலெக்டர்‌ அலுவலகத்‌தில்‌ டிஆர்‌ஓ ஜெயச்சந்‌திரன்‌ முன்னிலையில்‌ துப்பாக்கிகளுக்கான உரிமத்தை புதுப்பிக்கும்‌ பணியில்‌ ஈடுபட்டனர்‌. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ மொத்தம்‌ 40பேர்‌ துப்பாக்கி பயன்படுத்துவதற்கான உரிமத்தை புதுப்‌ பிக்க விண்ணப்பித்தனர்‌. இதுகுறித்து ராணிப்‌ பேட்டை கலெக்டர்‌ அலுவலக அதிகாரிகள்‌ கூறுகையில்‌, கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளுக்கும்‌ மேலாகத் துப்பாக்கி. வைத்திருப்போருக்கான உரிமம்‌ பெறும்‌ பணிகள்‌ நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில்‌, தற்‌போது துப்பாக்கிகள்‌ வைத்திருக்கும்‌ முன்னாள்‌ ராணுவத்தினர்‌ ராணுவ‌ பணியில்‌ ஈடுபட்டு ஓய்வுபெற்று பின்னர்‌ வங்கிகள்‌ பாதுகாப்புப் பணியில்‌ ஈடுபடுவோர்‌, நரிக்குறவர்கள்‌ மற்றும்‌ தங்களது சுய பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் வைத்துள்ள தனிநபர்கள்‌ என நேற்று 40 பேர்‌ துப்பாக்கிகள்‌ வைத்திருப்பதற்கான உரிமத்தை புதுப்‌பித்துள்ளனர்‌.

அவர்களின்‌ விண்ணப்பங்கள்‌ பரிசீலனை செய்யப்பட்டு உரியநடவடிக்கை  எடுக்கப்படும்‌, என்றனர்‌.