சூளேரிக்காடு பகுதியில் சாலைத்தடுப்பில் மோதி கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

மேலும் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.