நிகழ்வுகள் :-

👉 1914ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி முதலாம் உலகப்போர் ஆரம்பமானது.

👉 1821ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி பெரு என்ற நாடு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

👉 1988ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி இந்தியாவின் தேசிய இறகுப்பந்து வீரர் சையது மோடி மறைந்தார்.


முக்கிய தினம் :-

உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்
👉 ஒவ்வொரு ஆண்டும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் ஜூலை 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

👉 உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


உலக கல்லீரல் அழற்சி தினம்
👉 கல்லீரலைத் தாக்கும் ஹெபடிடிஸ் (Hepatitis) எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

👉 கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இத்தினம் உலக சுகாதார அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது. 


பிறந்த நாள் :-

ராபர்ட் ஹூக்
👉 செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கிய ராபர்ட் ஹூக் 1635ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 

👉 இவர் தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பு பற்றிய விரிவான விளக்கங்களை தந்துள்ளார். மேலும், பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளார். 

👉 முதன்முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தார். 1684ல், நடைமுறைப்படுத்தவல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். 

👉 மேலும், இவர் முதல் கணித கருவியையும், தொலைநோக்கியையும் வடிவமைத்துள்ளார். ஹூக் விதியை வரையறுத்துள்ளார். இன்றளவும் மிகச்சிறந்த எந்திரவியலாளராக கருதப்படும் இவர் தனது 67வது வயதில் (1703) மறைந்தார்.