நிகழ்வுகள் :-

👉 1856ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தில் பிறந்தார். 

👉 1822ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்த ராபர்ட் வில்லியம் தாம்சன் ஸ்காட்லாந்தில் பிறந்தார்.


முக்கிய தினம் :-

உலக சதுப்புநிலக் காடுகள் தினம்
👉 புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் கேடயமாக சதுப்புநிலக் காடுகள் உள்ளன. இவை கடற்கரையை ஒட்டி உள்ளன. இதனை மாங்ரோவ் காடுகள், அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

👉 எனவே, இவற்றை அழியாமல் பாதுகாத்திட ஜூலை 26ஆம் தேதி உலக சதுப்புநிலக் காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


கார்கில் போர் நினைவு தினம்
👉 ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே 1999ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்ற போரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக இழந்தனர்.

👉 நாட்டு மக்களுக்காக இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் ஜூலை 26ஆம் தேதி, கார்கில் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


பிறந்த நாள் :-

மு.கு.ஜகந்நாதராஜா
👉 மொழிகளுக்கு இடையே அறிவைப் பரிமாறிய பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா 1933ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் பிறந்தார்.

👉 தன் விடாமுயற்சியால் பல மொழிகளை கற்றுக்கொண்டார். பிறகு தமிழின் மேன்மைமிக்க இலக்கியங்களான திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றை தெலுங்கில் மொழிப்பெயர்த்தார்.

👉 மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். இதுவே, தமிழ் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய முதல் நூலாகும்.

👉 முத்தொள்ளாயிரம், தமிழும் பிராகிருதமும், இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994), திராவிட மொழிகளில் யாப்பியல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

👉 பல மொழிகளுக்கு இடையே மனித அறிவை விரிவுப்படுத்திய இவர் தனது 75வது வயதில் (2008) மறைந்தார்.