🌐 1996ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அட்லாண்டாவில் ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமானது.

🚉 1900ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி பாரிசில் முதலாவது சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது.

🏀 1980ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மாஸ்கோவில் ஆரம்பமானது.


பிறந்த நாள் :-

மங்கள் பாண்டே

🏁 இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். 

🏁 1857ல் சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.

🏁 இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது. 

🏁 பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

🏁 மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. Raising என்ற திரைப்படம் 2005ல் வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.


ஜெயந்த் நர்லிகர்

★ இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் 1938ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் பிறந்தார்.

★ நிலை மாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ஹாயில்-நர்லிகர் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். 41கி.மீ. உயரத்தில் மீவளி மண்டலத்தில் (Stratosphere) நுண்ணுயிரிகள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்த குழுவுக்கு தலைமையேற்று வழி நடத்தினார்.

★ மேலும் இவரின் பங்களிப்பிற்காக பத்ம பூஷண் விருது (1965), இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் இந்திரா காந்தி விருது (1990), பத்ம விபூஷண் விருது (2004), மகாராஷ்டிர பூஷண் விருது (2010), சாகித்ய அகாடமி விருது (2014) உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

★ தனது ஆராய்ச்சிகள் மூலம் பல சாதனைகளை வானியல் துறையில் செய்த இவர் தனது 79வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.