நிகழ்வுகள் :-

💉 தெற்காசியாவின் முதல் பெண் மருத்துவரும், பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவருமான காதம்பினி கங்குலி 1861ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி பீகார் மாநிலம் பகல்பூரில் பிறந்தார். 

🎼 1935ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி இந்து ஆன்மிகத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்தார். 

✍ 2013 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக கவிஞர் வாலி மறைந்தார். 

🚀 1965ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.

🚀 1966ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது. 

✍ 1977ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.


பிறந்த நாள் :-

நெல்சன் மண்டேலா

🏁 தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18ஆம் தேதியை ஐ.நா.சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது.

🏁 அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இவர் 1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் குலு என்ற கிராமத்தில் பிறந்தார்.

🏁 இவர் சட்டம் பயின்ற பிறகு, கறுப்பின மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவரானார். இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப்போராட்டங்களையும் நடத்தி வந்தார்.

🏁 அதன்பின், 1961-ல் இந்த இயக்கத்தின் ஆயுதப்படைத் தலைவராக உருவெடுத்தார். இவர்மீது மனித உரிமை மீறல்கள் குற்றம் சாட்டப்பட்டு, 1962-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1964-ல் ஆயுள் தண்டனை (வயது 46) விதிக்கப்பட்டது.

🏁 மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம் என அரசின் நிபந்தனையை நிராகரித்தார். நாட்டின் புதிய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் 1990-ம் ஆண்டு (வயது 71) விடுதலை செய்யப்பட்டார். 

🏁 தொடர்ந்து போராடி, இறுதியில் 1994-ல் நாடு விடுதலை அடைந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார். நேரு சமாதான விருது, பாரத ரத்னா விருது (இந்தியர் அல்லாத ஒருவருக்கு இந்த விருது அப்போதுதான் முதன்முறையாக வழங்கப்பட்டது), அமைதிக்கான நோபல் பரிசு, மகாத்மா காந்தி சர்வதேச விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

🏁 உலகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நெல்சன் மண்டேலா, 2013-ம் ஆண்டு, 95-ம் வயதில் மறைந்தார்.