👉 1819ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஓவே அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் ஸ்பென்சர் என்ற ஊரில் பிறந்தார். 

👉 2006ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. 

👉 1927ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி இந்திய இயற்கையியலாளர் ஜே.சி. என்று அறியப்படும் ஜீவநாயகம் சிரில் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார். 

👉 1943ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் கன்னியாகுமரி மாவட்டம் நரிக்குளம் எனும் ஊரில் பிறந்தார். 


நினைவு நாள் :-

👉 2009ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தமிழக எழுத்தாளர் சி.ஆர்.கண்ணன் மறைந்தார்.


பிறந்த நாள் :-

கே.பாலசந்தர்
👉 தமிழ் திரையுலக இயக்குனரான கே.பாலசந்தர் (Kailasam Balachander) 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார்.

👉 இவர் 1964-ல் திரைப்படத்திற்கு வசனம் எழுதி, தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது.

👉 இவர் கவிதாலயா என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஏராளமான நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

👉 இவர் வாழ்நாள் சாதனையாளர் விருது(2008), தாதா சாகேப் பால்கே விருது(2010), தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், அறிஞர் அண்ணா விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

👉 திரையுலகில் வெற்றி உலா வந்த கலையுலக பாரதி கே.பாலசந்தர் 84வது வயதில் (2014) மறைந்தார்.