👉 1949ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி பிறந்தார்.

👉 1895ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சோவியத் ரஷ்யாவை சேர்ந்த இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான இகார் டேம் (Igor Tamm) பிறந்தார்.

👉 1497ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வாஸ்கோட காமா, இந்தியாவிற்கான முதல் நேரடிப் பயணத்தை துவங்கினார்.


நினைவு நாள் :-

👉 2007ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முன்னாள் இந்திய பிரதமர் சந்திரசேகர் மறைந்தார்.


பிறந்த நாள் :-

சவுரவ் கங்குலி
👉 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

👉 இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் தி ஆஃப் சைட் (God of the Off Side) என அழைக்கப்படுகிறார். 

👉 இவர் 2000 முதல் 2005 வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார்.

👉 இவருக்கு 2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் 2008ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 

👉 உலகின் மிகச்சிறந்த அணி தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் இவர் தனது 47வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.