குறள் : 446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
மு.வ உரை :
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.
கலைஞர் உரை :
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை :
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.
Kural 446
Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich
Chetraar Seyakkitandha Thil
Explanation :
There will be nothing left for enemies to do against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.
இன்றைய பஞ்சாங்கம்
16-07-2021, ஆனி 32, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி காலை 06.06 வரை பின்பு சப்தமி திதி பின்இரவு 04.34 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 02.37 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் பின்இரவு 02.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. தட்சிணாயன புண்யகாலம் ஆரம்பம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 16.07.2021
மேஷம்
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கடகம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிட்டும். வருமானம் பெருகும். கடன் பிரச்சினை தீரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேல் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கும்.
தனுசு
இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
மீனம்
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலையில் ஊதியம் உயர்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.