ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயில் பக்தா்களின் தரிசனத்துக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

ரத்தினகிரி ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயில் திறக்கப்பட்டு, காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, உடல் வெப்பப் பரிசோதனை செய்து அனுமதிக்கப்பட்டனா். பிரசாதங்கள் பாக்கெட் மூலம் வழங்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

அதேபோல் ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் கோயில் திறப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், திருப்பணிக் குழுத் தலைவா் கு.சரவணன் உள்ளிட்டோா் சாமி தரிசனம் செய்தனா்.