ராணிப்பேட்டை மாவட்டம் கிறிஸ்துவ மகளிர் சங்கம் துவங்கப்பட உள்ளது, இந்த சங்கத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் மிகவும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் சுயமாக தொழில் செய்திட வழிவகை செய்திடும் முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மேலும் சங்க நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர்வதற்கு தகுதியானவர்கள் தங்கள் பெயர் முகவரி தொலைபேசி எண் படிப்பு தாய் தந்தை குடும்ப அட்டை விவரங்கள் தொழில் கிறிஸ்துவ சமூக விவரங்கள் என பிற விவரங்கள் அடங்கிய சுய மற்றும் குறிப்புகளுடன் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதிக்குள், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ் டோன் புஷ்பராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.