ராணிப்பேட்டையில் காணாமல் போன காது மற்றும் வாய் பேச முடியாத 15 வயது சிறுவனை ரயில்வே போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் முனுசாமி, செல்போன் வாங்கித் தராததால் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு கடந்த 8-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித் திரிந்த சிறுவனை மீட்டு விசாரித்த ரயில்வே போலீசார் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.