தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவித்துள்ளன. இதனை ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் முறையாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.  

இந்நிலையில் ராணிப்பேட்டை வாலாஜா ஆற்காடு அரக்கோணம் ஆகிய பகுதிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை ஜூலை 28 , 29 ஆகிய தேதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இராமலிங்கம். மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகேசன் (ராணிப்பேட்டை) செந்தூர வேல் (அரக்கோணம்) ஆகியோர் ஆய்வு செய்து அரசு உத்தரவின் விதிகளை பின்பற்றாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

இதன்படி அதிகப்படியான ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் அரசு பேருந்து 2 தனியார் பேருந்து 1. தனியார் தொழிற்சாலை வேன் 7. உட்பட 10 வாகனங்களும் வரி செலுத்தாத மேக்ஸி கேப் வேன் 1. அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகள் 2. ஆட்டோ ரிக்ஷா 1. ஆகியவற்றிற்கு அபராதத் தொகையாக ரூபாய் 50, 000 வசுலிக்கப்பட்டது. இதில் அபராதம் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையாக ரூபாய் 14. 000. மும் இதில் வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூபாய் 87. 000- வரி வசூலிக்கப்பட்டது. 

மேலும் வரி செலுத்தாத மூன்று வாகனங்கள் சிறைபிக்கப்பட்டன.