காவேரிபாக்கம் அடுத்த உத்திரம் பகுதியில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம் பகுதியில் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு அதை கொண்டாடும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் கபடி போட்டி நடத்தப்பட்டது. 

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டு போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 20, 000 முதல் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.