ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே நங்கமங்கலம் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் மிகவும் புகழ் பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மிக பிரமாண்டமாக அந்த கிராமத்தில் அருள்பாலித்து வருகிறார்.

பிறகு கோயில் அருகே ஓம்சக்தி அம்மன் கோயில் வளாகத்தில் வெளியே இருக்கும் வேப்பம்மரமும் அரசமரமும் ஒன்றுக்கு ஒன்று பின்னி பிணைந்து வளர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் கோயில் வேப்பமரத்தில் திடிரென்று மரத்தில் பால் வடிந்துள்ளது இதை பார்த்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி வேப்ப மரத்திற்கு பட்டாடை கட்டி மஞ்சள் குங்குமம் ஆகியவை மரத்தில் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அனைவரும் கோவிலுக்கு உள்ளே இருந்த வேப்ப மரத்தில் இருக்கும் அம்மனை வழிப்பட்டு கும்பிட்டு சென்றனர்
ஆடி மாதம் அம்மன் கோயிலில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் கோவில் உள்ளே இருக்கும் பக்தர்கள் அனைவரும் பரவசமடைந்தனர்.