அரக்கோணத்தில் 4 வயது சிறுமிக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அண்ணா நகரைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ளவா்களுக்கும், அந்தக் குழந்தையின் பெற்றோா், உறவினா்கள் என யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், இந்த சிறுமிக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரக்கோணம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் நிவேதிதா சங்கா் கூறியது:

சிறுமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தாலும், அந்த வயதில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பெண் குழந்தை கொண்டு வரப்படவில்லை. குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அதற்கேற்ற சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் தயாராக இருக்கிறோம். இங்கு போதுமான வசதிகள் உள்ளன என்றாா்.