ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆரணி சாலை கணபதி நகரில் நேற்று முன்தினம் ஜூலை 4-ஆம் தேதி புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. 

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு பிரியாணி ரூபாய் 20 என போஸ்டர்கள் மூலம் விளம்பரம் செய்திருந்தனர். இதனால் ஆச்சரியம் அடைந்த பொதுமக்கள் காலை 10 மணி முதல் கடை முன்பு கூட்டம் கூட்டமாக சேர ஆரம்பித்தனர். 

நேரம் செல்ல செல்ல சமூக இடைவெளியின்றி அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடை ஊழியர்கள் திணறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

500-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும், சரியாக மாஸ்க் அணிய வில்லை. ரூபாய் 20 பிரியாணிக்கு ஆசைப்பட்டு கடை முன்பு சமூக இடைவெளி இல்லாமல் கரோனா தொற்று காலத்தில் குவிந்த பொதுமக்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.