வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் பஞ்சமுக வராகி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது. 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள, பஞ்சமுக வராகி அம்மன் ஆலயத்தில், 10 நாட்கள் நடக்கும் ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. 

இது குறித்து, தன்வந்திரி பீடாதிபதி முரளிதர சுவாமிகள் கூறியதாவது: 

ஆனி அமாவாசையை முன்னிட்டு ஆஷாட நவராத்திரி, குப்த நவராத்திரி என்னும் வராகி நவராத்திரி விழா நேற்று தொடங்கி, 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் வராகியை வேண்டி அபிேஷகம், ேஹாமம், சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அலங்காரம், 108 நெய் தீபம் மற்றும் ஆராதனை நடக்கிறது. வராகியை வழிபடுபவர்களுக்கு எதிரிகள் இருக்காது. நினைத்தது நடக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். தினமும் சந்தனம், பால், மூலிகை பொருட்களால் அபி ேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.