ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளை சாா்பில் செயல்படும் இலவச முதியோா் இல்லச் செயலாளராக, வாலாஜாபேட்டை தொழிலதிபரும், சமூக ஆா்வலருமான ஜே.சா்ஜன்ராஜ் ஜெயின் தோ்வு செய்யப்பட்டுள்ளாா் .

இவருக்கு முதியோா் இல்லத் தலைவா் ஜெ.லட்சுமணன், பொருளாளா் பி.என். பக்தவச்சலம், துணைத் தலைவா் பென்ஸ் பாண்டியன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இல்லச் செயலாளராக இருந்த ஓய்.அக்பா்ஷெரீப் மரணம் அடைந்ததையடுத்து, புதிய செயலாளா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.