இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமான டெல்டா வைரஸால் இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு புதிய உருமாறிய வைரஸ் ஒன்று பெரூ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த வைரஸ் ஒருவரின் உடலில் 82% பாதிப்பை ஏற்படுத்தி விடுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் லாம்ப்டா வேரியண்ட் எனப்படும் இந்த வைரஸ் இதுவரை 30 நாடுகளில் பரவிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த லாம்ப்டா வேரியண்ட் வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவக்கூடியது மற்றும் ஆபத்தானதாகும்.