அசோக் லேலண்டின் துணை நிறுவனத்தில் அமெரிக்க நிறுவனம் முதலீடு.. 10% ஏற்றத்தில் பங்கு விலை..! -யார் முதலீடு
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம், இந்தியாவில் வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும்.

குறிப்பாக வர்த்தக வாகனங்களுக்கு பேர் போன அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் ஸ்விட்ச் மொபைலிட்டி..

இந்த ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனம், 100 வருடம் அனுபவமுள்ள, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும்.

உற்பத்தி
மின்சார வாகனங்கள் உற்பத்தி
குறிப்பாக மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும். இது பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, புதுமையான கண்டிபிடிப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றது. மொத்தத்தில் மின்சார வாகன துறையில் ஒரு புதுமையை புகுத்தும் ஒரு முன்னணி நிறுவனமாக வலம் வருகின்றது.


யார் முதலீடு

இத்தகைய ஒரு நிறுவனத்தில் தான், அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான, டானா இன்கார்ப்பரேட் நிறுவனம் இந்த முதலீட்டினை செய்ய ஒப்பந்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உதிரி பாகங்கள் சப்ளை

லண்டனை அடிப்படையாக கொண்ட ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனம் இது குறித்த அறிக்கையில், டானா நிறுவனத்தின் முதலீடு மேலும் விரிவாக்கத்திற்கு உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார பேருந்துகள், இன்வெர்டர்ஸ், சாப்ட்வேர்கள் மற்ற உதிரி பாகங்கள் என பலவற்றையும் சப்ளை செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
தீரஜ் இந்துஜாவின் கருத்து

இது குறித்து ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனத்தின் தலைவர், தீரஜ் இந்துஜா, டானா நிறுவனம் ஸ்விட்ச் நிறுவனத்திற்கு முக்கிய சப்ளையராக மட்டும் அல்லாமல், நிறுவனத்தின் 18 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து, 1% பங்கினை வாங்கும் எனவும் தெரிவித்துள்ளார். டானா நிறுவனம் ஏற்கனவே அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முக்கிய நட்பு நிறுவனமாக இருந்து வருகின்றது.


வர்த்தக உறவு

இந்த முதலீடு பெரியளவில் இல்லாவிட்டாலும், இந்த இரு நிறுவனங்களின் வர்த்தகத்தினை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யவும். வர்த்தக உறவு என்பது வலுப்படும் என்றும் தீரஜ் ஹிந்துஜா தெரிவித்துள்ளார்.

ஸ்விட்ச் நிறுவனத்தின் பணி
ஸ்விட்ச் நிறுவனம், இந்தியாவில் அசோக் லேலண்டின் மின்சார வாகன செயல்பாடுகளையும், லண்டனில் Optare இணைக்கிறது. இது சர்வதேச சந்தைக்காக பயணிகள் வாகனத்தினை வடிவமைத்து வரும் ஒரு சர்வதேச நிறுவனமாகும். இது எடை குறைவான தனித்துவமான வாகனங்கள், குறைவான செலவில் வடிவமைக்கும் ஒரு நிறுவனமாகும்.

இன்றைய பங்கு விலை

மொத்தத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இன்றைய பங்கு விலையானது இன்று NSEல் 6.07% அதிகரித்து, 132.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே BSEல் 6.03%ல் அதிகரித்து, 132.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்சம் 137.45 ரூபாய்கும். குறைந்த விலை 126.50 ரூபாயாகவும். இதன் 52 வார அதிகபட்ச விலை 138.85 ரூபாயாகவும், இதே 52 வார குறைந்தபட்ச உச்ச விலையும் 48 ரூபாயாகவும் உள்ளது.