ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே களத்தூர் குட்டைத்தெருவைச்சேர்ந்த பொன்மொழி(30)இவர்கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பள்ளம் வெட்ட கூலிக்கு சென்று இருக்கிறார் பிறகு நேற்று அதிகாலை அவர் வீடுதிரும்ப ஓச்சேரிக்கு வந்து அங்கு விட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை எடுத்து அங்கிருந்து கிளம்பியுள்ளார்

களத்தூர்அருகே மேம்பால கட்டுமாணப் பணிக்கான சர்வீஸ் ரோட்டில் வந்த பொன்மொழியின் இருசக்கர வாகனம் மீது ஏதிரே வேகமாக வந்த மினி பஸ் பயங்கரமாக மோதியது இதில் பலத்த படுகாயமடைந்த பொன்மொழியை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 

பிறகு மருத்துவர்கள் அவரை பரிசோத்த போது பொன்மொழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது தொடர்பாக அவளூர் போலிஸார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.