ஆற்காடு அருகே சாலையில் லாரியும் பைக்கும் முந்த முயன்ற தகராறில் இளைஞர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். 

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு  நாதமுனி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (28), கார் ஓட்டுநர். ஆற்காடு தோப்புகானா பகுதியைச் சேர்ந்த அருண் (21) இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். 
நண்பர்களான இருவரும் திங்கள்கிழமை நள்ளிரவில் ஆற்காடு அடுத்த வேப்பூர் புறவழி சாலையில் ஒரே பைக்கில் வந்துள்ளனர்.

அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை முந்த முயன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதில் லாரி ஓட்டுனருக்கு மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் வெட்டியுள்ளார். சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். அருண் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுபற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் ஆற்காடு நகர போலீஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாரி ஓட்டுநர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.