வேலூர் நேதாஜி மார்கெட்டில் காய்கறி மொத்த வியாபார கடை நடத்தி வரும் சத்துவாச்சாரியை சேர்ந்த பாலு என்பவரிடம் வசூர்ராஜா கூட்டாளிகள் என கூறி உதயா, ஐய்யப்பன் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் மாமுல் கேட்டு உள்ளனர். வியாபாரி பாலு பணம் தர மறுத்ததால் ரவுடி கும்பல் கத்தியால் வெட்டியுள்ளனர்.

அதில், வியாபாரி பாலு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக வேறு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.