பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரது இல்லத்தில் சந்தித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆளுநரை நியமித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் திடீர் டெல்லி விசிட் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கெனவே குடியரசுத்தலைவரை ஆளுநர் சந்தித்து பேசியிருந்த நிலையில்,
பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார்.

தமிழக ஆளுநரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் தமிழகத்துக்கு புதிய ஆளுநரை தேர்வு செய்வதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

அதன்படி தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் அல்லது பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.