ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி எம். பி. டி சாலையோரத்தில் வசிக்கும் அன்பரசன் என்பவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை உள்ள சர்விஸ் ரோட்டில் இருசக்கர வாகனம் எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் அருகே சென்றுள்ளார்
அப்போது ஓச்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சர்வீஸ் ரோட்டில் எதிரே மிக வேகமாக வந்துள்ளார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அன்பரசன் மீது அந்த இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இதுகுறித்து அவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.