வாலாஜா காந்திநகரில் புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாலாஜாவில் 3 கோடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாலாஜா தாலுகா அலுவலகம் தற்போது பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 100 ஆண்டுகளை கடந்தது. இதனால், இந்த புதிய 2 மாடி கட்டிடம் கட்ட அரசு தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, இதற்காக வாலாஜா காந்திநகர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், 23 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதில், தாசில்தார், ஆதிதிராவிடர், சமூக நலத்துறை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் வர உள்ளன. 

இதற்கிடையே, தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் கட்டும் பணியை பொது பணித்துறை செய்து வருகிறது. வருகிற நவம்பர் மாதம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும் என பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.