ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 15 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் மாவட்ட எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா உத்தரவு 

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 15 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் 

அதன்படி சிப்காட் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்த திரு சிதம்பரம் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராகவும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்தீஸ்வரன்  வாழைபந்தல் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் 

மேலும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 17 காவல் உதவி ஆய்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களுக்குச் சென்று உடனடியாக பொறுப்பு ஏற்கும்படி  மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.